NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சிரா இலக்கியக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா

சிரா இலக்கியக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா

 சிரா இலக்கியக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா திருச்சி தமிழ் சங்கத்தில் சிரா இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர் கேத்தரீன் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது.


இதில் தமிழ் சங்கம் அமைச்சர் உதயகுமார்,தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஆராய்ச்சி அலுவலர் ஓய்வு.பத்மாவதி,புரட்சி பாவேந்தர் பேரவை செயலாபதி,உரத்த சிந்தனை செயலாளர் அப்துல் கலாம்.தமிழ் மன்ற தலைவர் கவிஞர் கோவிந்தசாமி,ராயல் லைன்ஸ் சங்கம் தலைவர் முகமது ஷபி.சிரா இலக்கிய கழகபுரவலர் பார்த்திப ஜெயசீலன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்


சிரா இலக்கியக் கழகத்தின் தலைவர் தமிழ்மாமணி ஸ்ரீராம்,வரவேற்புரை ஆற்றினார்.



நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.சிறப்பு விருந்தினர்களாக 324 -F அரிமா மாவட்டம்முன்னாள் ஆளுநர் சௌமா இராஜரத்தினம்,ராக்போர்ட் நியூரோ மையம் நிபுணர் டாக்டர் வேணி,ஆகியோர் கலந்து கொண்டு ஆடல் பாடலில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்



இந்த நிகழ்வில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் ஒலிக்கப்பட்டு மாணவிகள் நடனங்கள் ஆடினர்.நிகழ்ச்சியில் சிரா இலக்கிய கழக பொருளாளர் மற்றும் சிரா பதிப்பாக நிறுவனர் தங்க பிரகாசி ராமச்சந்திரன் முடிவில் சிரா இலக்கியக் கழகத்தின் இணைச்செயலாளர் சுமித்ராதேவி, மாதவன், நன்றி உரையாற்றினார்.



விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments