சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல் படி தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கிளை மன்றங்கள் திரளாக கலந்து கொண்டனர்
0 Comments