சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
இதன் ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் வளாக அருகில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், பொருளாளர் முரளி, கோட்டதலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், கனகராஜ், தர்மேஷ், மணிவேல், தர்கா தளபதி பகதுஷா, ராணுவ பிரிவு ராஜசேகரன் கே டி பொன்னன் ,மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், ஓ பி சி அணி மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், ஐடி பிரிவு அரிசி கடை டேவிட்,மருத்துவர் அணி டாக்டர் கோகுல கண்ணன், கிளமெண்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
0 Comments