சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள வ.உ.சி.உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், மாநில தொண்டர் அணி வெல சாகுல், பொருளாளர் மில்டன்குமார், துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் ,பகுதி செயலாளர் என்.எஸ்.எம் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
0 Comments