BREAKING NEWS *** ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”- அமைச்சர் சேகர்பாபு *** திருச்சியில் இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர் பாதுகாப்பு மையம் திறப்பு விழா

திருச்சியில் இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர் பாதுகாப்பு மையம் திறப்பு விழா

 திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர் பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.


இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின் மற்றும் இறகுகள் அகாடமியின் நிறுவனர்.மரிய மெர்சி ஆகியோர் சார்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக  பல்வேறு சமூக சேவைகளை நடத்தி வருகின்றனர். அதில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை சேர்ந்த 250 நபர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர் அதேபோல் தந்தை தாயை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஞாயிறு உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரத்ததானம் வழங்குதல், 


அதேபோல் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இறகுகள் அகாடமி ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின் மற்றும் இறகுகள் அகாடமியின் நிறுவனர்.மரிய மெர்சி ஆகியோரைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த அகடமின் முக்கிய நோக்கம் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கு எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பு மற்றும் அரசு பணித்துறைக்கு தயாராகும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை தரமான ஆசிரியர்களை கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.


அதன் படி இறகுகள் தொண்டு நிறுவனத்தின் மற்றொரு படைப்பான ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியில் இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர்கள் பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிச்சைமணி, கலந்துகொண்டு இறகுகள் முதியோர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார், என் டிவி தொலைக்காட்சியின் உரிமையாளர் சுதர்சன், நடிகை டாக்டர் தனன்யா, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மி பிரபா, பட்டிமன்ற பேச்சாளர் சாத்தம்மாள் பிரியா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் நீலா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். 



மேலும் விழாவில்  வேர்ல்ட் ரெக்கார்ட் மிமிக்ரி ஆர்டிஸ்ட் விஜய் சன் டிவி புகழ் ஆங்கர் வீஜே ராம், ப்ராஜெக்ட் மானிட்டர் இரட்சக ராஜன், மாற்றம் அமைப்பின் நிர்வாகி நடிகர் தாமஸ், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நண்பர்கள் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராபின் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த இறகுகள் முதியோர் இல்ல பெற்றோர் பாதுகாப்பு மைய திறப்பு விழாவிற்கு கீதாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றது

Post a Comment

0 Comments