NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி கம்பரசம்பேட்டையில் சின்னாபின்னமான தெருக்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி கம்பரசம்பேட்டையில் சின்னாபின்னமான தெருக்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி கம்பரசம்பேட்டையில் சுகாதாரம் இன்றி சேறும் சகதியுமாக உள்ள தெருக்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை 


திருச்சியில் கடந்த சில நாட்களாக லேசாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலை சேறும் சகதியுமாக காணப்பட்டு வருகிறது ‌


இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலை மிகவும் மோசமடைந்து சேறும் சகதியுமாக சுகாதாரமற்ற நிலையில் காட்சி அளிக்கிறது.


இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ மாணவிகள்  பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.பெரியார் நகர் பகுதியில் சுகாதாரம் இல்லாததால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட பொது செயலாளர் பாரத் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடமும் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.


அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சேறும் சகதியுமாக உள்ள சாலையை புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Post a Comment

0 Comments