விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக பெண்களின் பாதுகாப்பு மனித சமுதாயத்தின் பொறுப்பு என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி மாவட்டதலைவர் தௌலத் நிஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவர் மூமினா பேகம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் மசூதா மர்யம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் விமன் இந்தியா மூவ்மெண்ட் தமிழ் மாநில செயலாளர் தஸ்லிமா ஷரீஃப் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு ஆகியோர்கள் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மனித சமுதாயத்தின் பொறுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வழக்குரைஞர்.இமாம். அப்துல்லாஹ் ஹஸ்ஸான்பைஜி.,MBA.,LLB., அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் அரசியலின் பங்கெடுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்
விம் மாவட்ட பொதுச்செயலாளர் சமீனா பர்வீன் அவர்கள் இந்நிகழ்வினை தொகுத்து வழங்கினார்கள்
இந்த நிகழ்வில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K. தமீம் அன்சாரி, மாவட்ட பொதுச் செயலாளர் A.முகமது சித்திக், மாவட்டச் செயலாளர்கள் மதர்.Y.ஜமால் முஹம்மது,தளபதி அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.S.அப்துல் காதர் (பாபு), கிழக்குத் தொகுதி தலைவர் சபியுல்லா,கிழக்கு தொகுதி இணைச் செயலாளர் ராயல் அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், திருவரம்பூர் தொகுதி துணைத் தலைவர் கைருதீன், மேற்கு தொகுதி செயலாளர் KSA.ரியாஸ்,மாவட்ட பேச்சாளர் முகமது வாசிக்,வரகனேரி கிளை தலைவர் ஷேக் உள்ளிட்ட நிர்வாகிகள், ஜின்னா திடல் கிளைத்தலைவர் சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக விம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருவரம்பூர் தொகுதி தலைவர் J.பாத்திமா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
0 Comments