// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி ரன்மேட் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம்

திருச்சி ரன்மேட் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம்

 திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மக்களுக்கான பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் சாலையில்  அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. 


இதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, டயாலிசிஸ் நோயாளிகள், சிறுநீரக கல், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான ஆலோசனைகளை டாக்டர் சிவரஞ்சனி  வழங்கினார். 


மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ரூ.200 க்கு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஹீமோகுளோபின் அளவு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு,  யூரியா மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது.

 இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமானது, நாளை முதல் (02.12.24) வரும் 6 ஆம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மருத்துவமனை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments