NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் பல்வேறு நிகழ்வில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

திருச்சியில் பல்வேறு நிகழ்வில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

 சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற சில துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத காரணத்தினால் நேற்றைய தினம் திருச்சிக்கு வருகை தந்த மஜக தலைவர் அவர்கள் அவர்களது இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார்கள்.


முன்னதாக ஜமால் முகமது கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர்  Dr.காஜா நஜிமுதீன் அவர்களின் துணைவியார் அப்ரோஸ் பேகம் அம்மா அவர்கள் மரணம் அடைந்த செய்தி அறிந்து காஜா நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்..

இந்த  சந்திப்பில் கல்லூரியின் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது முனைவர்கள் அப்துல் காதர் நிஹால், பாசில், ராஜா முஹம்மது மற்றும் குடும்பத்தார்கள் உடன் இருந்தனர்.


அதனைத் தொடர்ந்து மாவட்ட இளைஞரணி செயலாளர் சகோதரர் ஜமீர் பாஷா அவர்களின் உறவினர் குழந்தை ஆஷிக் மறைந்த செய்தி அறிந்து அந்த  குழந்தை இல்லத்திற்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்,


இறுதியாக அயலக திமுகவின் பொறுப்பாளரும் தலைவரின் நண்பருமான சவுக்கத் அவர்களின் மாமனார் மறைவை ஒட்டி தில்லைநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்,



இந்த நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் M.முஹமது ஷரிப், திருச்சி மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு, அவைத்தலைவர் ஷேக் தாவூத், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தர்வேஷ், ஷேக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் யாசர், நியாஸ், ஹம்ருதீன், ஜாக்கீர், சீசம்,  அப்பாஸ் மந்திரி, ஹபிபுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments