// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 


கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது.





இதனால் விவசாயிகள் சாகுபடி செய்கிறத பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிய நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு 40ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments