// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

 திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. 


இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் தலைவர் சுகந்திராஜா தலைமை தாங்கினார்.


கௌரவ தலைவர்கள் காமராஜ், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக  ஆர்டிஓ சம்பந்தமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தரக்கோரியும், அதேபோல் திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் தேர்தல் வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திருச்சி ரவி மினி ஹாலில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


 முன்னதாக திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்க செயலாளர் ஜேம்ஸ் பொருளாளர் ராஜன் துணைத் தலைவர்கள் சிக்கந்தர், அகஸ்டின், துணை செயலாளர் ஜெய் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments