NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் கிரிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

திருச்சியில் கிரிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

கிரிஸ்டல் வர்த்தக கண்காட்சி நிறுவனம் சார்பில் திருச்சி ஶ்ரீவாசவி மகாலில் 4வது கிரிஸ்டல் பில்ட் எக்ஸ்போ 2024 என்ற கட்டுமான பொருட்கள் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.



இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.கிரிஸ்டல் வர்த்தக கண்காட்சி நிறுவன இயக்குனர் அர்ச்சனா தலைமை வகித்தார்.



அரவிந்த் ஜனனி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் தனசேகரன் முன்னிலை வகித்தார்.திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் குத்து விளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.


கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் ஸ்டால்களை அமைத்துள்ளனர்.திருச்சி மாவட்ட சிவில் இன்ஜினீயர்ஸ் அசோசியேஷன் தலைவர் சதீஸ்வரன், செயலாளர் பாலன், பொருளாளர் பாபு ,திருச்சி பிசினஸ் நெட்வொர்க் இந்தியா கிளாடியேட்டர்ஸ் துணை தலைவர் சிவக்குமார், சார்க் சுரேஷ் குமார் உட்பட கட்டுமான மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.



இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 70க்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் கட்டுமான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.



இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியை கண்டு களிக்க அனுமதி இலவசம் என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments