NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவுபடுத்தி பேசி வரும் சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் : காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவுபடுத்தி பேசி வரும் சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் : காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் அறிக்கை வெளியிட்டுள்ளார்...


 அதில், கூறுகையில்...திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர்' சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறுவதற்காக நீங்கள் முயற்சி செய்வதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, இஸ்லாமியர் ஓட்டுக்களை பெறுவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன் பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன்.


அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, திமுகவுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர். அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள் என்று கூறினார். திமுகவிற்கு மட்டுமே இஸ்லாமியர்கள் ஓட்டு போடுகிறார்கள் என்ற கோபத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவு படுத்தி தொடர்ந்து பேசி வரும் சீமானுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு சீமான் மீது தம் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments