புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.ஜெயக்குமார் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .
இந்த நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொரடா மனோகரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,
எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் புங்கனூர் கார்த்தி , மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் எல்.ஜெ. நவநீத கிருஷ்ணன், மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments