// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி 28 வது வார்டு பகுதியில் புதிய கழிவுநீர் சாக்கடை கட்டும் பணி துவங்கியது

திருச்சி 28 வது வார்டு பகுதியில் புதிய கழிவுநீர் சாக்கடை கட்டும் பணி துவங்கியது

 திருச்சி மாநகராட்சி  28 வது வார்டு குத்பிஷா நகர் மற்றும் பாரதி நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடை களை புதிதாக கட்டும் பணிகள் ரூபாய் 50,00,000 மதிப்பீட்டில் குத்பிஷா நகர் பகுதியில் இன்று காலை அந்த பகுதி ‌பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம்,மாநகராட்சி இளநிலை பொறியாளர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.


தொடர்ந்து பாரதி நகர் பகுதியிலும் சாக்கடை கட்டும்  பணிகள் தொடங்கப்பட உள்ளது.


28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஃபைஸ் அகமது இரண்டு நாட்களில் பணிகளை தொடங்க அனைத்து பணிகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என்பதை தெரிவித்ததன் அடிப்படையில் இன்று பணிகள் தொடங்கின.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டல தலைவர், மாநகராட்சி உயர் அதிகாரிகள், திமுக வட்ட செயலாளர் அம்ஜத் ஆகியோருக்கும், பணிகள் விரைந்து தொடங்க முயற்சிகள் மேற்கொண்ட மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது அவர்களுக்கும் ஜமாத் நிர்வாகிகள்  மற்றும் 28 வது வார்டு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments