// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தமிழ்நாட்டின் கலாச்சாரத் திருநாள் பொங்கல் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து

தமிழ்நாட்டின் கலாச்சாரத் திருநாள் பொங்கல் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து

 தமிழ்நாட்டின் கலாச்சாரத் திருநாள் பொங்கல் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழர் மனங்களிலும் ; அவர்களின் மனைகளிலும்; பூவாசம் வீசும் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகையை குதூகலத்துடன் எதிர்கொள்கிறோம் .


பசுமை பொங்கும் வயல்வெளிகள், பனித்துளிகளை  இலைகளில் ஏந்தியவாறு  சிரிக்கும் தாவரங்கள், தங்களையும் மகிழ்விக்கிறார்கள் என்ற பெருமிதத்தில் தலை உயர்த்தி நிற்கும் கால்நடைகள், இதமான குளிரும்,மிதமான வெயிலும் கைகுலுக்கும் வானிலை என பொங்கல் திருநாள் இயற்கையின் வசந்தத்தை  வாரி அனைத்து நம்மை மகிழ்விக்கிறது.

தொடர் விடுமுறைகளோடு கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் கலாச்சார திருநாளான பொங்கல் திருநாளில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாசுபடாத நிலம், தூய நீராதாரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க  இந்நாளில் உறுதி ஏற்போம் ! என அவரது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments