// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தெலுங்கில் பிசியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தெலுங்கில் பிசியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 


இவர் தமிழ் சினிமாவில்'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் அதனைத் தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய நடிகை என பெயர் பெற்றார்.

தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதன்படி, ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம் படம் கடந்த 14-ம் தேதி திரைக்கு வந்து ரூ. 200 கோடி வசூல் செய்திருக்கிறது

இதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் வெற்றி பட நடிகை என்ற பட்டியலில் சேர்ந்து இருக்கிறார். இதனால், புதிய தெலுங்கு படங்களில் அவரை நடிக்க வைக்க அங்குள்ள இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது


Post a Comment

0 Comments