NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கிராம மக்கள் அடுத்தடுத்து நடத்திய சாலை மறியல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கிராம மக்கள் அடுத்தடுத்து நடத்திய சாலை மறியல்

 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கிராம மக்கள் அடுத்தடுத்து நடத்திய சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது


தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன்  இணைத்து தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அப்பாத்துரை, எசனைக்கோரை புதுக்குடி, தாளக்குடி மற்றும் மாடக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடனும் கீழவாளாடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது .இந்நிலையில் அப்பாத்துரை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமாடுகளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனை அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது எங்கள் கிராம ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்கும் பட்சத்தில் 100 நாள் வேலை திட்டம் கைவிடப்படும்.மேலும் மாநகராட்சிக்கு மாதாமாதம் வீட்டு வரிக்கட்ட வேண்டும். குப்பை வரி கட்ட வேண்டும். காவிரி தண்ணீர் வேண்டும் என்றால் தனி குடிநீர் வரி கட்ட வேண்டும்.

இதனை கிராம மக்கள் சமாளிப்பது என்பது இயலாத காரியமாக மாறும் எனவே எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி தாசில்தார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கோரிக்கை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


இதேபோன்று கீழவாளாடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் லால்குடி நகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.லால்குடி திருச்சி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.




Post a Comment

0 Comments