NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் G. N. சண்முகசுந்தரம் ஆசான் செயலாளர் யுவராஜ்  அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை  பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்..


பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில்  திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் சிலம்பம் பயிலும் மாணவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தி பொங்கல் வைத்து பாரம்பரிய கலைகளான சிலம்பம் கம்பு வாள் கேடயம் மான் கொம்பு ஈட்டி சுருள் வாள்  சக்கரப்போத்து நட்சத்திர போத்து செடி குஞ்சு சக்கை உள்ளிட்ட கலைகளை செய்து காட்டி  சிறப்பு செய்தனர்.






இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் LIC K. சங்கர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ் தாய் நேசம் அறக்கட்டளையின் நிறுவனர்  தலைவர் ஹெப்சி சத்தியாராக்கினி  தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











 மேலும் இந்த நிகழ்வில் மாஸ்டர் மனோகரன் பயிற்ச்சியாளர்கள் சேஷாத்ரி கீர்த்திஹரன் வைஷ்ணவி பரிமளம் மற்றும் சிலம்ப மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments