நூற்றாண்டு கண்ட திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான பணி இடைப் பயிற்சி 20.1.25 முதல் 24.1.25 வரை நடைபெற்றது. தொடக்க விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுத் தேர்வு உதவி இயக்குநர் உயர்திரு ஜி ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து தொடக்க விழாச் சிறப்புரையாற்றினார்.
எதிர்காலத் தலைமுறையினரை மிகச் சிறப்பானவர்களாகவும் அறிவு ரீதியாக மேம்பட்டவர்களாகவும் மாற்றுவதற்கு அடிப்படைக் கட்டமைப்பில் அறிவியல் துறையில் மேம்பாடு அடையச் செய்ய ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்தது. மனச்சோர்வு அடையாமல் அறிவியலை அடுத்த தலைமுறை மாணவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான ஒரு தூண்டுகோலாக இப்பயிற்சி அமைந்தது. 24.1.25 அன்று நிறைவு பெற்ற அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியின் நிறைவு விழா தேசியக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கி .குமார் தலைமையில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக அறிவியல் மேலாண்மையியல் துறையின் பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருச்சி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி நிறைவு விழாச் சிறப்புரையாற்றினார். ஆசு என்றால் குற்றம் என்றும் குற்றம் களைபவர்களே தரமான ஆசிரியர்களாகச் சமூகத்தில் பரிணமிக்க முடியும் என்றும் தரமான தலைமைத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தமது நிறைவு விழாச் சிறப்புரையில் பதிவு செய்தார். திருச்சி மாவட்ட அளவில் வருகை தந்த பல்வேறு பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்கள் இப்பயிற்சியின் நிறைவு குறித்து தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டங்களாகப் பதிவு செய்தனர். தேசியக் கல்லூரியின் துணை முதல்வர்கள் முனைவர் நந்தகோபால் மற்றும் மற்றும் முனைவர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.50க்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிய இம்மாபெரும் பயிற்சியைத் தேசியக் கல்லூரியின் தாவரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் மா. கோப்பெருஞ்சோழன் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைது வழிநடத்தினார்.
நிருபர் - ரூபன்
0 Comments