NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞர் அணி சார்பில் தினசரி காலண்டர் வெளியீடு

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞர் அணி சார்பில் தினசரி காலண்டர் வெளியீடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் சார்பில் தினசரி காலண்டர் வெளியிடும் நிகழ்ச்சி திருச்சி  பாலக்கரையில் நடைபெற்றது.


இளைஞர் அணி மாவட்ட தலைவர் அஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாநில செயலாளர் பஷீர் அலி,மண்டல ஒருங்கிணைப்பாளர் சாதிக்குல் அமீன் மற்றும் மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு காலண்டரை வெளியிட மாநில துணைச் செயலாளர் ஹாஜி பாரூக் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


மேலும் மாவட்ட செயலாளர் ஹாஜி சையது ஹக்கீம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளும், மகளிர் அணி மாவட்ட தலைவர் ஆரிபா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளும், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஹாஜி முகம்மது பாரூக் தலைமையில் வர்த்தகர் அணி நிர்வாகிகளும், தொண்டரணி மாவட்ட தலைவர் காஜா அலாவுதீன் தலைமையில் தொண்டர் அணி நிர்வாகிகளும், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பரக்கத் அலி தலைமையில் ஆட்டோ சங்க நிர்வாகிகளும், மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஹாஜி சம்சுதீன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியின் மாவட்ட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments