// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** பொய் வழக்கு போடும் போலீசார்; மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ரவுடி மனு

பொய் வழக்கு போடும் போலீசார்; மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ரவுடி மனு

திருச்சி அருகே உள்ள கிளிக்கூடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதில், எனக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தை களும் உள்ளனர். 




20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கொலை வழக்கில் எனது பெயர் இருந்தது. அதன் பின் தொடர்ச்சியாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்த 4 வழக்கு களில் இருந்தும் விடுதலை ஆகி விட்டேன். தற்போது மனைவி குழந்தைகளுடன் திருந்தி வாழ்ந்து வருகிறேன். ஆனால் காவல்துறையினர் என் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். என்னை விசாரணைக்கு அழைத்து செல்கிறார்கள். குற்ற செயல்களில் இருந்து விலகி திருந்தி வாழ நினைக்கும் எனக்கு தொந்தரவு கொடுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.



மேலும் நான் விவசாயம் செய்வதற்கு வங்கி கடன் வழங்கி உதவி செய்யும்படியும் வேண்டுகிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது..

Post a Comment

0 Comments