NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

திருச்சியில் போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

 திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் புதிய போஷ் (POSH ) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான், தலைமையில் நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக  அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.


இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினரும், திருச்சி மாவட்ட துணை செயலாளருமான முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.


மேலும் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த திருச்சி மாவட்ட அமைப்பாளர் மு.பீர்முகமது, பகுதி துணை செயலாளர் சந்திரமோகன் மற்றும் திருச்சி மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பைசல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



இந்த அழகு நிலையத்தில் ஃபேஸ் வாஷ், ஹேர் கட்டிங், திருமண பெண் அலங்காரம், ஹேர் டை போன்ற அழகு கலையை சிறந்த வல்லுனர்களைக் கொண்டு அதி நவீன தொழில் நுட்பத்துடன் குறைந்த செலவில் ஆண் பெண் இருபாலருக்கும் அழகு படுத்துதல் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments