மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தென் மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென் மண்டல செயலாளர் முஹம்மது அஷ்ரப் அவர்கள் தலைமையில், மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷெரிப் அவர்கள் முன்னிலையில் எழுச்சியோடு நடைபெற்றது.
முன்னதாக மண்டல செயலாளர் அஷ்ரப் அவர்கள் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்,
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-
1. மஜக - இளைஞர் அணி யின் 2025 இலக்கை நோக்கிய பயணமான "10,000 - புதிய உறுப்பினர்கள் சேர்க்கை" முகாம்களை அந்தந்த மாவட்டங்களில் நடத்துவது,
2. தென் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணி நிர்வாகத்தை முழுமைப்படுத்தி கட்டமைப்பை வலுப்படுத்துவது,
3. இளைஞர் அணி தலைமை அறிவித்துள்ளது போல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மாநில செயற்குழு மற்றும் இளைஞர் அணி மாநாடு குறித்து களப்பணிகளை தீவிரப்படுத்துவது,
4. தென்காசி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும்.
5. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிகப்படியாக கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் பழுதடைவதோடு மட்டுமன்றி, நம் தமிழகத்தின் கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் இந்த மணல் கொள்ளையை கட்டுக்குள் கொண்டு வந்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டம் வலியுறுத்துகின்றது.
6. தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கும், மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
7. தென்காசி மாவட்டத்தில் இளம் சிறார்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் வண்ணம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த கோரியும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக்கப்படாமல் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆத்தூர் ரஹிமான், தென்காசி மாவட்ட செயலாளர் ஆதம் ஹனீஃபா, அவைத் தலைவர் சையத் அலி, மாவட்ட பொருளாளர் சிக்கந்தர், தென்காசி இஸ்மாயில், மன்சூர், சங்கை இஸ்மாயில் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்வினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இறுதியாக இளைஞர் அணி மாநில செயலாளர் திருச்சி ஷரிப் நன்றியுரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
0 Comments