NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 


அவர் பேசுகையில்... இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மத நல்லிணக்கம் நிலவுகிற நாடு. இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் சமய வேறுபாடு இன்றி சகோதரத்துவ உணர்வோடு வாழ வலியுறுத்தினார். 


முன்னதாக கல்லூரியின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கில் வாழ்த்துரை வழங்கி இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்


கல்லூரியின் செயலர் அருள் முனைவர் கே அமல் அவர்களும், கல்லூரி முதல்வர் முனைவர் மரியதாஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்


நிகழ்ச்சியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமல ரத்தினம் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.



நிகழ்வின் இறுதியில் கவுரவ விருந்தினரான திருச்சி மாவட்ட அரசு ஹாஜி மவுலவி முப்தி முனைவர் கே ஜே ஜலில் சுல்தான் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மற்றும் துவா செய்து இஃப்தார் விருந்தினை தொடங்கி வைத்தார். 


நிகழ்வில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டு குழுவின் உதவி புல முதன்மையர் முனைவர் குர்ஷித் பேகம் அவர்கள் செய்திருந்தார்.


நிகழ்வில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவியர் மட்டுமல்லாது பல்வேறு மதங்களை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்ட நிகழ்வு மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

Post a Comment

0 Comments