சிறுபான்மையினரின் மொழி உரிமை பாதுகாக்கப்படும் என வாக்குறுதி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அறிவுறுத்தல்படி தென் மண்டலத்தை தொடர்ந்து. நான்காம் கட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி வடமேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.
முன்னதாக வேலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நஃபீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் இளைஞர் அணியின் அவசியம், கட்டமைப்பின் தேவை மற்றும் செயலாற்ற வேண்டிய வழிமுறை குறித்தும் உருது மற்றும் தமிழ் மொழியில் கருத்துரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-
1. மஜக - இளைஞர் அணி யின் 2025 இலக்கை நோக்கிய பயணமான "10,000 - புதிய உறுப்பினர்கள் சேர்க்கை" முகாம்களை அந்தந்த மாவட்டங்களில் நடத்துவது,
2. வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணி நிர்வாகத்தை முழுமைப்படுத்தி கட்டமைப்பை வலுப்படுத்துவது.
3. இளைஞர் அணி தலைமை அறிவித்துள்ளது போல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மாநில செயற்குழு மற்றும் 2025 - 2026 இளைஞர் அணி மாநாடு குறித்து களப்பணிகளை தீவிரப்படுத்துவது,
4. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு கூடுதல் மருத்துவர் களை அமர்த்த இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
5. தோல் பதப்படுத்துதல் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு நல வாரியம் அமைக்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
6. ஆம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
7. திருப்பத்தூர் மாவட்டத்தில் இளம் சிறார்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் வண்ணம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த கோரியும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக்கப்படாமல் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
மேலும் இக்கூட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட அவைத் தலைவர் முபாரக், மாவட்டச் செயலாளர் ஜாஹிருஜ் ஜமா, பொருளாளர் நசீர் @ முன்னா மற்றும் துணைச் செயலாளர் சுபைர் உட்பட நிர்வாகிகள் மிக அழகாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இறுதியாக திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் ஜாஹிருஜ் ஜமா நன்றி உரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
0 Comments