NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மூன்று மத தலைவர்கள் பங்கேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மூன்று மத தலைவர்கள் பங்கேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இளைஞர் அணி மண்டல ஒருங்கிணைப்பாளர் சாதிக்குல் அமீன் தலைமையில் நடைபெற்றது.இளைஞர் அணி மாவட்ட தலைவர் அப்துல் அஜீம் முன்னிலை வகித்தார். 

இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் முகமது சமீர் இறை வசனம் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்‌ இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான்,மாநில துணைச் செயலாளர் பாரூக்,இளைஞர் அணி மாநில செயலாளர் பஷீர் அலி,மாநில பொருளாளர் அபூ பாரிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 


திருச்சி அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் ஹஜ்ரத்,புனித ஜான்பால் உரையாடல் மன்ற இயக்குனர் அருள்பணி சார்லஸ், திருவானைக்காவல் டாக்டர் சக்தி சுவாமிஜி மற்றும் இளைஞர் அணி மாநில தலைவர் முஹம்மது யூனுஸ் ஆகியோர் சமூக நல்லிணக்க உரை நிகழ்த்தினார்கள்


இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஹுமாயூன்,அன்சர் அலி, ஷேக் முகமது கௌஸ், முனைவர்.பைரோஸ் ஆரிஃபா,ஆயிஷா, ஜுனத் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் முகம்மது, முகம்மது நியாஸ், அசாருதீன், முகம்மது பாசில்,அலாவுதீன்,உமர் முக்தார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் மூன்று மதங்களைச் சார்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments