NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** காரைக்கால் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை இணைந்து நடத்திய முப்பெரும் விழா..

காரைக்கால் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை இணைந்து நடத்திய முப்பெரும் விழா..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீக் மற்றும் சிராஜூல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவை இணைந்து காரைக்கால் காதர் சுல்தான் வீதி, நிஜாம் மஹால், எழுச்சி கவிஞர் காரை ஜின்னா நினைவரங்கத்தில் நடத்திய முப்பெரும் விழா (முஸ்லிம் லீக் நிறுவன தினம் - நோன்பு திறப்பு - மத நல்லிணக்க ஒன்றுகூடல்) நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காரைக்கால் மாவட்ட தலைவர் முஹம்மது ஆரிப் மரைக்காயர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முகமது அபூதர் மைதீன்  கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.

 பாண்டிச்சேரி மாநில துணைத்தலைவர் முஹம்மது ஆரிப் மரைக்காயர் வரவேற்புரை ஆற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட மற்றும் சிராஜுல் மில்லத் இலக்கிய பேரவை இலக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, சமூக ஆர்வலர் அமீர் ஜவஹர், பேராசிரியர் சாயபு மரைக்காயர், மறை மாவட்ட பங்கு தந்தை பால்ராஜ் குமார் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்கள்.தமிழக அரசு வழங்கிய தமிழ்ச் செம்மல் விருதுப் பெற்ற நாகூர்  கவிஞர் நாகூர் காதர் ஒலி  அவர்களுக்கு புதுச்சேரி மாநில தலைவர் முஹம்மது அலி மரைக்காயர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தர்கள்.


இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தலைவர் முஹம்மது அலி மரைக்காயர் அரசு சமாதான கமிட்டி உறுப்பினர், தெண்டாயுதபாணி பத்தர் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் நாகூர் சாஹா மாலிம்,  Dr.ஹாஜா பாரூக், காங்கிரஸ் விவசாய அணி பொதுச் செயலாளர் ஷேக் பரீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் அபுல் ஹசன்,  மாநில செயலாளர் முஹம்மது இஸ்மாயில், காரைக்கால் மாவட்ட செயலாளர் சுல்தான் கபீர், இளைஞரணி தலைவர் ஜாஃபர் சாதிக், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகப்பட்டினம் அன்சாரி, கவிஞர் நாகூர் காதர் ஒலி, காங்கிரஸ் பிரமுகர், அரசு சமாதான கமிட்டி உறுப்பினர், பஷீர்,பைந்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள், உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர் .பாண்டிச்சேரி மாநில பொதுச் செயலாளர் அப்துல் நசீர் குலாமுதீன்  நன்றியுரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய பெருமக்களும், ஜமாஅத்தார்களும் திரளாக பங்கேற்றனர்.


நிருபர் - முகமது ஆரீப் மரைக்காயர் 

Post a Comment

0 Comments