NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தென் தமிழகத்தில் முதல் முறையாக 3D லேப்ராஸ்கோப்பி திருச்சி கதிர் மருத்துவமனையில் அறிமுகம்

தென் தமிழகத்தில் முதல் முறையாக 3D லேப்ராஸ்கோப்பி திருச்சி கதிர் மருத்துவமனையில் அறிமுகம்

 தென் தமிழகத்தில்  முதல் முறையாக ஐசிஜி தொழில்நுட்பத்துடன் கூடிய 3D  லேப்ராஸ்கோப்பி கருவி  கதிர் மருத்துவமனை சார்பில்  அறிமுகம் செய்யப்பட்டது. 3D லேப்ராஸ்கோப்பி கருவியை அறிமுகம் செய்து  கதிர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் எலும்பு, முதுகெலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத்குமார், இயக்குனர் கதிரொளி ஆகியோர் பேசியது:

மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓபன் அறுவை சிகிச்சை பிறகு லேப்ராஸ்கோப்பி அதற்கு பிறகு 3D  லேப்ராஸ்கோப்பி என அறுவை சிகிச்சை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 


தோன்றும் உருவங்கள் மிக அருகில் தெரிவது போல,  3D லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் உடல் உறுப்புகளை அருகில், தெளிவாக, பக்கவாட்டிலும், 3D  தோற்றத்திலும் பார்க்க முடியும். இதன் மூலம் அறுவை சிகிச்சையை மிக துல்லியமாகவும், அருகில் உள்ள மற்ற உடல் உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் செய்ய முடிகிறது. இதில் ஐசிஜி வசதியிருப்பதால் புற்றுநோய் கட்டிகளை அகற்றும் போது அருகில் உள்ள மற்ற கட்டிகளின் நிலையை தெளிவாக கண்டறிய முடியும்.  கடந்த ஒரு ஆண்டாக முதுகெலும்பு பிரச்சனைக்கு கதிர் மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு மேல் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை அளித்து இருக்கிறோம். சிறிய அளவில் துளை போட்டு முதுகெலும்பு சிகிச்சை செய்யப்படுகிறது. 


3D  சினிமா பார்க்கும் போது படங்களில் இந்த சிகிச்சையில் குறைவான ரத்தப்போக்கு, சிறிய தழும்பு, விரைவில் குணம் ஏற்படுகிறது..  சிறந்த உள்கட்டமைப்பு வசதி, நவீன கருவிகள், அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருப்பதால் பல சவாலான சிகிச்சைகள் இங்கு வெற்றிகரமாக செய்யப்படுகிறது குறிப்பாக கருப்பையில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அகற்றும் போது அதன் அருகில் உள்ள பெலோபியன் குழாய், குடல் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாதிப்பையும் ஐசிஜி மூலம் தெரிந்து கொள்ள முடியும். 3டி லேப்ராஸ்கோப்பி மூலம் சாக்லெட் சிஸ்ட், பைபிராய்ட் கட்டிகள், கருப்பபையில் உள்ள கட்டிகளையும் அகற்ற முடியும். இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது 3டிக்கு தேவையான கிளாஸ் போட்டுக் கொள்ள வேண்டும். 

3டி லேப்ராஸ்கோப்பியை பயன்படுத்தி சிறுநீரகம், வயிறு, குடல் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்ய முடியும். 3டி லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் குறைந்த அளவிலான ரத்த சேதம், சிறிய தழும்பு, விரைவில் குணம் அடைவதுடன் அறுவை சிகிச்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.  கதிர் மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சைக்கான  கட்டணம்தான் 3டி லேப்ராஸ்கோப்பி சிகிச்சைக்கும் பெறப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் கதிர் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர். இயக்குனர் மற்றும் மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை நிபுணர் கதிரொளி உட்படபலர் கலந்து கொண்டனர். 


Post a Comment

0 Comments