திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலகுமார் மகன் தர்ஷன் (13). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று தர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் உயிரிழப்பிற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் கொள்ளிடம் ஆற்றில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் பணி நடைபெற்ற இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை மற்றும் திருவிழா நாட்களில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பிற்கு போலீசாரும் வரவில்லை எனக்கூறி 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் திருச்சி நாமக்கல் சாலையில் நொச்சியம் நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த சாலை மறியலால் திருச்சி நாமக்கல் மற்றும் நாமக்கல் திருச்சி, துறையூர் திருச்சி மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பழநிவேல் ஜியபுரம் டிஎஸ்பி, மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது தாசில்தார் கூறுகையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தபடும் மற்றும் மாணவன் இறப்பிற்கு முதல்வர் நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜகவினர் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மாணவன் இறந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments