NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் துண்டறிக்கை பரப்புரையை விரிவாக்குவோம் ..! மஜக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ...!

திருச்சியில் துண்டறிக்கை பரப்புரையை விரிவாக்குவோம் ..! மஜக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ...!

 மனிதநேய ஜனநாயக கட்சி  திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பகீர் மைதீன் பாபு அவர்கள் தலைமையில் அவை தலைவர் ஷேக் தாவூத் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் தர்வேஷ், ஹபிப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி எம்.முஹம்மது ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகம் ஊட்டி எழுச்சி உரையாற்றினார்.


முன்னதாக கடந்த 04.04.2025 அன்று வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில் நடைபெற்ற  ரயில்வே ஜங்ஷன் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு நன்றி பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ...

தீர்மானம் 1 :-

வரும் வெள்ளிக்கிழமை நாளன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வக்பு திருத்த சட்ட விழிப்புணர்வு துண்டறிக்கையை வினியோகம் செய்வது. 

தீர்மானம் 2 :-

வரும் 4 ஆம் தேதி மாவட்ட செயலாளர் பாபு பாய் அவர்களின் மகள் திருமணத்தை, மஜக இல்ல மணவிழாவாக சீரும் சிறப்போடு முன் நின்று நடத்தி முடிப்பது. இந்நிகழ்விற்கு தலைமையேற்று நடத்தித் தர திருச்சி மாநகருக்கு வருகை தரும்  மஜக  தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை பிரம்மாண்டமாக வரவேற்பது.


தீர்மானம் 3 :- 

பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டறிக்கை விநியோகம் செய்து பிரச்சாரத்தை தீவிரப் படுத்துவது.

தீர்மானம் 4 :- 

கோடைகால தாகத்தைப் போக்க பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர், மோர் பந்தல் அமைப்பது.

தீர்மானம் 5 :-

துண்டறிக்கை விநியோகத்திற்கு மாவட்ட கேபினட் நிர்வாகிகள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமித்து அவர்களை கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டது.மேலும் இக்கூட்டத்தில் பெருந்திரளாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments