NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

 மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும், மேலும்  பணி நிரந்தரம், பணி உயர்வு, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 12000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 300 ககும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சங்கத்தின் பொருளாளர் ராணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,..


கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாத விடுமுறை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அதனை தொடர்ந்து துறை அமைச்சர் கீதா ஜீவன் 30 நாட்கள் விடுமுறை அறிவித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக  15 நாட்கள் மட்டுமே விடுமுறை அளித்துள்ளனர். 



வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால்  அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது. அதனால் எப்போதும் போல குழந்தைகளுக்கு T.H.R மூலம் உணவு வழங்கி விட்டு, 

எங்களுக்கு இந்த 30 நாட்களும் விடுமுறை அளிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு வரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments