// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்க.வில்லை என்றால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - நடத்துவோம் முன்னாள் ராணுவத்தினர் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்க.வில்லை என்றால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - நடத்துவோம் முன்னாள் ராணுவத்தினர் பேட்டி

இந்தியா - பாகிஸ்தான் போரின் போது சிந்தூர் ஆபரேஷன் நடைபெற்றது.இந்த போரின் போது ராணுவ வீரர்கள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவம் குறித்து விமர்சனம் செய்ததால் அவர் மீது பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்  முன்னாள் ராணுவத்தினர் சங்கத்தின் தலைவர் நவநீதம்கிருஷ்ணன் தலைமையில் திருச்சி கண்டோன்மென்ட் மேஜர் சரவணன் நினைவு இடத்தில் இருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில்  ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசினாரோ அதேபோல மீண்டும் செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி அதில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments