அணியாப்பூருக்கு மருத்துவமனை தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ப.அப்துல் சமது MLA அறிக்கை வெளியீட்டுள்ளார். அதில் கூறுகையில்..
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வையம்பட்டி ஒன்றியம் அணியாப்பூர் மக்கள் நீண்ட நாட்களாக என்னிடம் வைத்த கோரிக்கையை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நான் உரையாற்றும் போது அணியாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக கட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
மணப்பாறை தொகுதி அணியாப்பூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் தொகுதி மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
0 Comments