// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - வழக்கறிஞர்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் விழா

தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - வழக்கறிஞர்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாளையொட்டி வழக்கறிஞர் அணியின் சார்பில் இளம் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் விழா சென்னை Y.M.C.A அரங்கம் பாரிமுனையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர்  N.ஆனந்த் Ex.MLA கலந்து கொண்டு இளம் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கி சிறப்பு பேருரையாற்றினார்.


அதனைத் தொடர்ந்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில சட்டபிரிவு  S.குமரேசன் , நிகழ்ச்சி வரவேற்புரை அறிவழகன் ஆற்றினார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஸ்ரீ கிரிபிரசாத்,D.சக்திவேல், N.மனோஜ் குமார் ,R.S.இந்திரா தன்ராஜ்,குமரேசன்., A.அருண், R.செல்வபாரதி, K. லூர்து ஹென்றி டேனியல் மற்றும் அர்வின் பிரசாத்  ஆகியோர் கலந்து கொண்டனர் நன்றியுரை சக்கரவர்த்தி நன்றியுரை வழங்கினார் .இந்த விழாவில் திரளான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments