NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - இளைஞர் அணி ஏற்பாட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - இளைஞர் அணி ஏற்பாட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

தவெக தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு  பொதுச்செயலாளர் ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது 

த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் தொகுதி இளைஞரணி  நிர்வாகிகள் ஜீவா, கோகிலா, சந்திரசேகர், சுரேந்திரன், விக்னேஷ், தேவேந்திரன், கார்த்திக், 





சர்புதீன், கில்லி ராஜா மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி இளைஞரணி நிர்வாகி நிர்மலாஸ்ரீ இவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்பா  நகரில் உள்ள பொதுமக்கள் 51 நபர்கள் வீதம்  ஒவ்வொருவருக்கும் மளிகை பொருட்கள் மற்றும் புடவை மற்றும் மரக்கன்றுகள்  வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments