// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** இஸ்ரேல் நடத்தும் போர்களும் உலகம் சந்திக்கும் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் மஜக இளைஞர் அணி நடத்திய இணையவழி கருத்தரங்கம் ..

இஸ்ரேல் நடத்தும் போர்களும் உலகம் சந்திக்கும் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் மஜக இளைஞர் அணி நடத்திய இணையவழி கருத்தரங்கம் ..

 மனிதநேய ஐனநாயக கட்சி இளைஞர் அணி சார்பில் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தல் படி தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் பதற்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தும் போர்களும் ..! உலகம் சந்திக்கும் பிரச்சனைகளும் ..! எனும் தலைப்பில் (Google meet) இணைய வழி கருத்தரங்கம் இளைஞர் அணி மாநில செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளரும்,  இளைஞர் அணி மேலிடப் பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் கருத்தரங்கின் நோக்கத்தை விவரிக்கும் வண்ணம் எழுச்சிமிகு நோக்கவுரை ஆற்றினார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மே 17 இயக்க நிறுவனர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்   உலக நாடுகள் மத்தியில் நிலவி வரும் போர் பதற்றத்தின் அடிப்படை சாரம்சத்தையும், இதன் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிகழ்வுகளையும் உலகம் சந்திக்க இருக்கக்கூடிய எதிர்கால பிரச்சனைகள் குறித்து விரிவான சிறப்புரை ஆற்றினார். 


இந்நிகழ்வில் மஜக வின் மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய கிளை கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள்  என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியாக மாநில இளைஞர் அணி பொருளாளர் பெரம்பலூர் இம்ரான் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments