NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் ஏற்பாட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் ஏற்பாட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்பினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்..

இந்த நிலையில் திருச்சி மேல சிந்தாமணி FUN ZONE பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு இனிப்புகள்,நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில்,  விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் சிறுபான்மை துறை நிர்வாகிகள் பாலக்கரை இம்தியாஸ், தர்கா சுக்கூர், கிருபா, முபாரக் அலி, பீமநகர் அப்பு, உறையூர் விஜய், சசிகுமார், பள்ளி தாளாளர் யாஸ்மீன் பேகம் மற்றும் ஆசிரியர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments