NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** காமராஜர் 123 வது பிறந்தநாளையொட்டி 23 வது வார்டு மாநகராட்சி பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற்றது

காமராஜர் 123 வது பிறந்தநாளையொட்டி 23 வது வார்டு மாநகராட்சி பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற்றது

கல்விக்கண் திறந்த காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23 ல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் கிழக்கில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு புத்தகப் பைகளை மாமன்றஉறுப்பினர் க.சுரேஷ்குமார் வழங்கி உரையாற்றினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை பொறுப்பு ம.செசிலி வரவேற்புரையாற்றினார். மழலையர் வகுப்பு ஆசிரியை R.தாரணி நன்றி கூறினார். ஆசிரியர்கள் லதா, சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

Post a Comment

0 Comments