கர்ம வீரர் காமராஜர் 123 வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் இருக்ககூடிய அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் நலத்திட்டங்கள் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனையில்
திருச்சி மாநகர் மாவட்டம் சார்ந்த ஒன்றியம் பகுதி, பேரூராட்சி,வார்டு, கிளை,மற்றும் சார்பு அணிகள் சார்பாக காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி மற்றும் தொண்டர் அணி சார்பாக கருமண்டபம் பகுதியில் உள்ள அரசுமாநகராட்சி பள்ளியில் 150 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா, ஆகியவை வழங்கப்பட்டது........
0 Comments