// NEWS UPDATE *** கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் காலமானார் **** ஓரணியில் தமிழ்நாடு - தி.மு.க.வினர் OTP பெற தடை *** திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் 50 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் 50 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு

1997-ஆம் வருடம் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் குடிசை வீட்டிலும் வீட்டு வாடகை கொடுக்க முடியாத ஏழை எளியவர்க்கு கொடுக்க கூடிய இலவச வீட்டு மனை பட்டா திருவெறும்பூர் சட்டமன்றத்திற்குட்பட்டவர்களுக்கு தலா 3சென்ட் வீதம் திருச்சி திருநெடுங்குளம் பகுதியில் தேவராயநேரி செல்லும் வழியில் நமூனா பட்டா கொடுத்தார்கள். 

கொடுத்த 50பேர் வீதம் ஆதிதிராவிடர்களுக்கு  கொடுத்தார்கள். ஆதிதிராவிடர் நல துறையில் கணக்கில் ஏற்றபடவில்லை மற்றும் 50பேர் மற்றும் இன்னும் வீடு இல்லாமல் கஷ்டபடுகிறார்கள். பாதிபேர் வெளி மாவட்டத்திற்கு அதாவது தஞ்சாவூர்,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பிழைப்பிற்காக வெளியூர் சென்றிருக்கிறார்கள். ஆவர்களிடமும் அதாவது 1997-ம் வருடம் கொடுத்த நமூனா பட்டா இருக்கிறது. ஆவர்களும் இன்று வரை வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறார்கள். 

ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 50பேருக்கும் 1997-ம் வருடம் கொடுத்த நமூனா பட்டாவை வாங்கி கொண்டு ஆதிதிராவிட நலத்துறையில் அவர்களிடம் கொடுத்த பட்டாவை கணக்கில் ஏற்றி இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொடுத்த பட்டா கொடுக்கும்படியும் திருச்சி பாஜக, மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Post a Comment

0 Comments