NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** திருச்சியில் கிளை வாய்க்கால்களை விரைந்து தூர்வாராத திமுக அரசை கண்டித்தும், வாய்க்காலை தூர்வார வலியுறுத்தியும் விவசாயிகள் தர்ணா போராட்டம்

திருச்சியில் கிளை வாய்க்கால்களை விரைந்து தூர்வாராத திமுக அரசை கண்டித்தும், வாய்க்காலை தூர்வார வலியுறுத்தியும் விவசாயிகள் தர்ணா போராட்டம்

டெல்டா பாசனத்திற்காக காவிரியில் கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கிளை வாய்க்கால்களை முறையாக திமுக அரசு தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் குருவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில் லால்குடி வட்டம் ஆனந்திமேடு கிராமத்தில் 300 ஏக்கர் பாசனம் அளிக்கக்கூடிய தெற்கு அய்யன்வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து கிளைவாய்க்கால்களையும் விரைந்து தூர்வார வலியுறுத்தியும், அய்யன் வாய்க்கால் கரைகளை மழைகாலத்துக்கு முன்னதாக விரைந்து சீரமைத்திடவேண்டும், விவசாய பொருட்களை கொண்டுசெல்லஏதுவாக தார்சாலையிணை அமைத்துத்தரவேண்டும், ஏரி மற்றும் குளங்களில் தூர்வாரி தண்ணீர்நிரப்ப வலியுறுத்தியும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்சார்பில் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்கூட்டத்தை புறக்கணித்து, ஆட்சியர்  அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை விரைந்து வாய்க்கால்களை கணக்கெடுத்து முறையாக தூர்வார வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.



Post a Comment

0 Comments