// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் காவேரி கிளினிக் - 24x7 திறப்பு விழா

திருச்சியில் காவேரி கிளினிக் - 24x7 திறப்பு விழா

 காவேரி மருத்துவமனை குழுமத்தின் புதிய கிளினிக் சிறப்பாக திறக்கப்பட்டது. இந்த புதிய கிளினிக், நவீன மருத்துவ வசதிகளுடன், மக்கள் நலனுக்காக திறக்கப்பட்டது.காவேரி மருத்துவமனை குழுமம், தன் மருத்துவ சேவைகளின்  மேம்பாடு மற்றும் மக்களின் நலனை கருதி, பல்வேறு துறைகளில் நிபுணர்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த புதிய கிளினிக் திறப்பின் மூலம், மேலும் பலருக்கு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைக்க உறுதியாகிறது.இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



சிறப்பு அம்சங்கள்:

•நவீன மருத்துவ உபகரணங்கள்

•பல்வேறு துறை நிபுணர்களின் சேவைகள்

• மக்களுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சை

காவேரி மருத்துவமனை குழுமத்தின் நோக்கம், நம் சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் சிகிச்சை சேவையை எளிதாக்குவது.

எளிமையான அணுகல் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவ மையம் அருகில் உள்ள மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். காவேரி மருத்துவமனை குழுவில் விரைவான மருத்துவ கவனிப்பு கிடைப்பதன் மூலம் நோய்கள் பெரிதாக மாறுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வசிக்கும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும்.

காவேரி கிளினிக் - 24x7 சேவைகள்

காவேரி மருத்துவமனை கிளினிக், 24x7 செயல்படும் நவீன மருத்துவ வசதிகளை வழங்குகிறது. கீழே உள்ள மருத்துவ சேவைகள் உங்கள் நலனுக்காக எப்போதும் தயாராக உள்ளன:

•அவசர மருத்துவ சேவை: 24x7 அவசர மருத்துவ சேவை, அவசர நிலைகளுக்கு உடனடி மருத்துவ உதவியை வழங்குகிறது.

• வெளிநோயாளி ஆலோசனை (OP Consultation): நோயாளிகளின்    தேவைகளுக்கு தகுந்த நிபுணர்கள் மூலம் ஆலோசனை.

• ECG மற்றும் ECHO: இதய சிகிச்சைகளுக்கான நவீன பரிசோதனைகள்.

• இரத்த மாதிரி சேகரிப்பு (Blood Sample Collection): நோயாளிகளின் பரிசோதனைகளுக்கான விரைவான மாதிரி சேகரிப்பு.

• அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound): உள் உறுப்புக்களின் நவீன சிகிச்சை பரிசோதனை.

• டிஜிட்டல் எக்ஸ்-ரே (Digital X-Ray): எலும்பு மற்றும் உடல் அமைப்புகளை பரிசோதிக்க நவீன எக்ஸ்-ரே வசதி.

• மருந்தகம் (Pharmacy): நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்கும்.


Post a Comment

0 Comments