// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா - குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது

திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா - குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது

 திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி, காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மற்றும் கிடா வெட்டும் பெருவிழாவானது கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது .

கடந்த 8ம்  தேதி வெள்ளிக்கிழமை சங்கல்பவம் ,விக்னேஸ்வரர் பூஜை ,புண்யாக வாஜனம் ,முகூர்த்த கால் நடுதல் ,கோபூஜை ,கலச பூஜை மூல மந்திர ஹோமம் ,ஜபம் பாராயணம் , திறவ்யாஹீதி, நடைபெற உள்ளது தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் மகாபூர்ணகிதி ,கடன் புறப்படுதல் ,கலச அபிஷேகம் ,தீபாரதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது .



தொடர்ந்து நேற்றைய தினம் 9ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது .விழாவின் இறுதி நாளான இன்று காலை 8 மணி முதல் 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம்,அர்ச்சனை ,  சந்தன காப்பு அலங்காரம் ,குலதெய்வங்கள் மற்றும் உக்கிற தெய்வங்களுக்கு ஆடு கிடா வெட்டுதல் அசைவ நிறுத்தி படைகளும் இதர தெய்வங்களுக்கு சுத்தப்படையன்களும் வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மெகா அசைவ அன்னதானம்  நடைபெற்றது .இந்த மெகா அசைவ அன்னதானத்தின் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர் .

தொடர்ந்து மாலை வான வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கிலி கருப்பண்ண சுவாமி குடிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை தலைவர் பொறியாளர் கதிரவன் நிர்வாகிகள் அருணகிரி ,பிரபு, ரமேஷ், பெரியசாமி, மயிழ்வானன் ஆகியோர் செய்திருந்தனர். 



ஆண்டுதோறும் ஆடி மாதம் 28ஆம் தேதி கோவில் குடிப்பாட்டு மக்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு தொடர்ந்து கருப்பண்ண சுவாமி அருளை பெற வேண்டும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments