தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பாக தமிழக நீர்வள மேம்பாட்டு திட்டம் குறித்த பிரச்சாரம் மாநிலம் தழுவி முன்னெடுக்கப்பட உள்ளது அதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இந்த செய்தியாளர் சந்திப்பில் தலைவர் குருசாமி கூறும்போது
தமிழகத்தில் 37 அறிவிக்கப்பட்ட ஆற்றுப்படுகைகள் உள்ளன இவை யாவும் சுமார் 18,40 குறுவடி நில பகுதிகளில் அமைந்துள்ளன இந்த 18000 ஏறத்தாழ 6000 குறுவடி நில பகுதிகள் மீட்டெடுக்க முடியாதவாறு சேதப் படுத்தப்பட்டுள்ளன எஞ்சியுள்ள சுமார் 12,000 குறுவடிநில பகுதிகளும் சுமார் 12450 கிராம ஊராட்சிகளின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் சுமார் 38,000 நீர்நிலைகளும் 12450 ஊராட்சிகளில் தான் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சி ஒரு குறுவடி நில பகுதியை சீரமைத்து அந்தந்த கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை மீட்டு எடுக்க முடியும் இவ்வாறாக தமிழக அரசின் கணக்குப்படி உள்ள 38200 நீர் நிலைகளையும் முழு கொள்ளவுக்கு கொண்டு வர முடியும் மேலும் 200 டிஎம்சி கொள்ளவு கொண்ட புதிய நீர் நிலைகள் உருவாக்க திட்டம் வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான திட்ட அறிவிப்பும் செயல்பாடும் மேலும் 37 ஆற்றுப்படுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழகத்தின் முழு நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்
கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து பெய்து வரும் நல்ல மழையும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து சேரும் ஆற்று நீரூம் உள்ளிட்ட நீர்வளம் நமது மாநிலத்தில் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை இத்திட்டங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லவும் அரசுக்கு கோரிக்கையாக வைக்கவும், தமிழக ஆறுகள் வளமீட்பு இயக்கம் பிற நீர் மேலாண்மை ஆர்வலர்களுடனும், வேளாண் விவசாய சங்ககளுடனும் கலந்து மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளோம் .
பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏற்பாடு செய்யப்படுகிறது.மாநிலம் தழுவிய இந்த பிரசாரத்தை இந்தியாவின் தண்ணீர் மனிதர் டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் 28.09.2025 திருச்சியில் நடைபெறும் தமிழக நீர்வளப் பாதுகாப்பு திட்ட மாநாட்டில் துவங்கிவைக்கிறார். என தெரிவித்தார்
0 Comments