// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** திருச்சி பஞ்சு மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை தமிழக முதல்வர் பெற்று தரவேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை

திருச்சி பஞ்சு மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை தமிழக முதல்வர் பெற்று தரவேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை

திருச்சி எல்ஐசி காலணி பகுதியில் கடந்த 1965 இல் துவங்கப்பட்ட சபரி பஞ்சுமில்லில் பணியாற்றிய 400தொழிலாளர்களுக்கு  நிர்வாகம் மில்லின் பின்புறம் உள்ள இடத்தை வழங்குவதாக அரசுக்கு தெரிவித்தது.ஆனால் இந்த இடத்தை இதுவரை நிர்வாகம் வழங்கவில்லை. மேலும் ஆட்களை வைத்து மிரட்டு வருகின்றனர். எனவே, தமிழக முதல்வர் உரிய தீர்வு தர வேண்டும் என பணியாற்றிய தொழிலாளர்கள் இன்று மில்லில் முன்புறம் வந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மறைந்த காங்கிரஸ் கட்சியின்  INTUC சுப்பையா பாலாண்டர் பேரன் மோகன்குமார் அளித்த பேட்டியில்


சபரிமில்  நிர்வாகத்தை 1960ல் எங்களுடைய பெரிய தாத்தா அதாவது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் தகப்பனார் பழனியப்பன் செட்டியார் தொழில் தொடங்குவதற்காக இந்த இடத்தை கேட்டார். இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த இடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து 1965ல் பஞ்சுமில் ஏற்படுத்தப்பட்டது.பின்னர் 1996ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் இந்த மில் மூடப்பட்டது.


இதனால் சுமார் 600குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இந்த இடம் சுமார் 30ஏக்கர் பரப்பளவை கொண்டது. மில்லில் பின்னால் உள்ள இடத்தைபொது மக்களுக்கு கொடுப்பதற்காக அரசு பஞ்சுமில் நிர்வாகத்திற்கு  ஒரு நோட்டீஸ் அனுப்பியது.அப்போது மில் நிர்வாகமானது 400 தொழிலாளர்களுக்கு நாங்கள் இடம் வழங்க வேண்டும் என பொய்யாக ஒரு தகவலை கொடுத்தனர்.


அப்போது பணிபுரிந்த தொழிலாளர்களிடம் மேலாளர் சீதாராமன் என்பவர் ஆங்கிலத்தில் சில பதிவுகளை உள்ளடக்கிய காகிதத்தில் கையெழுத்தை வாங்கி கொண்டார். ஆனால் தொழிலாளர்களுக்கு உரிய இடத்தை வழங்கவில்லை.இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

விசாரணையின் முன்பு என்னை சந்தித்த மேலாளர் சீதாராமன் (இவர் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது) மத்திய அரசாங்கத்தில் எங்களுக்கு ஆட்களை இருக்கிறது என்று மிரட்டல் தொனியில்  பேசுகிறார்.தொடர்ந்து சீதாராமனின் ஆட்கள் தொடர்ந்து தொழிலாளர்களை மிரட்டி வருகின்றனர். இதனிடையே கவின் என்ற வழக்கறிஞர் ஒருவர் இந்த இடம் தொடர்பாக அமைச்சர்கள் மிரட்டல் விடுவதாக கூறி வருகின்றனர். அமைச்சர்களுக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது.எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தொழிலாளர்களுக்கான இடத்தை வாங்கி கொடுக்க வேண்டும், அதேபோல் டால்மியா சிமெண்டில் சபரி மில்லில் பணியாற்றிய வாரிசுகளுக்கு பணி வழங்க அவன செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments