திருச்செந்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையிலும், திருச்சி மாவட்ட தலைவர் நஜிமுதீன் முன்னிலையிலும் கலந்து கொண்டனர்.
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் சிலம்பம் பிரிவு மாணவர்கள் முஹம்மது இர்ஃபான் 19 வயதிற்கான சுற்றில் 24.5 புள்ளிகள் பெற்று முதலிடமும், முஹம்மது சல்மான் 17 வயதிற்கான சுற்றில் 25.6 புள்ளிகள் பெற்று முதலிடமும், சீமோன் 14 வயதிற்கான சுற்றில் 23.7 புள்ளிகள் எடுத்து முதலிடம், முஹம்மது காமில் சிலம்பு சண்டை போட்டியில் 21.6 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும் மற்றும் யோகீஸ்வரன் 10 வயதிற்கான சுற்றில் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இதற்காக பொருளாதாரம் மற்றும் உடல் உழைப்பு செய்தவர்களுக்கும் மாநிலத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
0 Comments