// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் வேன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என பெற்றோர்கள் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் வேன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என பெற்றோர்கள் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் வேன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என பெற்றோர்கள் குற்றச்சாட்டு...! வேன் வாடகையை இரு மடங்கு உயர்த்தியதால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி அருகே இயங்கி வரும் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 11ஆம் வகுப்பு வரை 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் தனியார் வேன் உரிமையாளர்களுடன்‌ ஒப்பந்தமிட்டு மாணவர்களை அழைத்து வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தனியார் வேனில் மாணவர்களை அனுப்ப வேண்டாம் எனவும் நாங்கள் வேறு ஒருவருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம் நாங்கள் அறிமுகம் செய்யும் வேனில் மட்டுமே குழந்தைகளே அனுப்பி வைக்க வேண்டுமென பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் வற்புறுத்தி உள்ளது. 


மேலும் இதற்காக ஒரு மாணவருக்கு 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வாடகை அதிகரித்து பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.இந்த நிலையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட வேனில் குழந்தைகள் சவுகரியமாகவும் அதில் இருக்கும் நபர்களிடம் நன்கு பழகியதால் அவர்களுடன் அனுப்பி வைக்கிறோம் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.


இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் அவர்களால் அங்கீகரிக்கப்படாத வேனில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தாமதப்படுத்தி வந்திருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதே பள்ளி நிர்வாகம் வேன் வாடகையில் தங்களை வஞ்சிப்பதாகவும் குழந்தைகளை தாமதமாக பள்ளியில் அனுமதிப்பதாகவும் பின்பு தாமதமாக பள்ளியை விட்டு வெளியேற்றுவதாகவும் குற்றம் சாட்டினர் 


இது குறித்து மாணவர்களின் பெற்றோர் சந்திரமோகன் கூறியதாவது..

கடந்த நான்கு வருடமாக எனது மகன் இந்த பள்ளியில் படிக்கிறான். பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்திய வேனியில் தான் எங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கிறோம்..பள்ளி நிர்வாகத்திற்கும் வேன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்போது குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என வற்புறுத்துகின்றனர். 




ஒரு நபருக்கு 800 ரூபாய் வீதம் வேன் வாடகை உயர்த்தி பள்ளி நிர்வாகம் கேட்கிறது. ஆனால் நாங்கள் வழக்கம் போல அன்பு சென்ற வேலையில் தான் குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். 

இதனால் பள்ளி நிர்வாகம் வளாகத்திற்குள் வேலை அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைக்கிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றால் அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. உடனடியாக பள்ளி நிர்வாகம் இது குறித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என கூறினார். 

மற்றொரு பெற்றோர் கூறியபோது,

மாணவர்களின் பெற்றோர் ஆகிய எங்களை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு எனக்கூறி நிர்வாகமே ஒரு முடிவு எடுத்து அதை தகவலாக மட்டுமே எங்களிடம் சொல்கின்றனர்.

1100 ரூபாய் இருந்தா வேன் வாடகையை 1980 ஆக இவர்களாகவே மாற்றி விட்டனர். தற்போது நாங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் வேன் பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. மாணவர் சேர்க்கையின் போது அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர்.

ஆனால் வருடம் சென்றதும் அதை கண்டு கொள்ளவில்லை. பிள்ளைகளை அவர்கள் துன்புறுத்துகின்றனர். பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட வேனை தற்போது முரண்பாடு காரணமாக அனுமதிக்க மறுக்கின்றனர் இதனால் மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் எங்களால் பள்ளி வகுப்பறைக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை என குழந்தைகள் அனுதினமும் எங்களிடம் சொல்லும் போது வேதனை அளிக்கிறது.

பள்ளி நிர்வாகம் தங்களது செயலை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவேளை பள்ளி நிர்வாகம் சார்பில் வேன் வசதி செய்யப்பட்டால் குறைந்த கட்டணத்தை ஏற்ற வேண்டும். முன்பு வேனை வளாகத்தில் அனுமதித்ததை போல் திரும்பவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Post a Comment

0 Comments