// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முகமது ஷெரீப் பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முகமது ஷெரீப் பங்கேற்பு

திருச்சியில் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடுவோம் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது ‌.மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் (எ) பாபு அவர்கள் தலைமையில், அவைத் தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட துணைச் செயலாளர் யாசர் ஷெரிப் உட்பட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ் அவர்கள் நிர்வாகிகளை வரவேற்புரை ஆற்றினார்.



அதன்பின் பேசிய மாவட்டப் பொருளாளர் ஜமீர் பாஷா அவர்கள் "நிர்வாக வளர்ச்சிக்கு நிதியின் அவசியம்" என்னவென்று விளக்க உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முஹமது ஷெரிப் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் கருத்துரையாற்றினார். அதன்பின் நிர்வாக சீரமைப்பு மற்றும் செயல் திட்டத்தின் அடிப்படை சாரம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 


இதற்கிடையில் மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் "கொள்கை பிடிப்பு" குறித்து உரை ஆற்றினார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

1. ஆகஸ்ட் - 15 திருச்சிக்கு வருகை தரும் மஜக தலைவர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது.

2. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றுவது. 


3. மாவட்ட இளைஞர் அணி சார்பில் சுதந்திர தின விழா சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது.

4. மாவட்ட முழுவதும் கிளைகளில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது.


5. பால்பண்ணை பகுதியில் பேருந்துகள் முறையாக நிறுத்தாமல், அவதிக்குள்ளாகும் பொது மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண துறை சார்ந்த அதிகாரிகளை சந்திப்பது.

போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

இறுதியாக மாவட்டத் துணைச் செயலாளர் அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றி உரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.



Post a Comment

0 Comments