உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக பாலூட்டும் வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதுபோல் திருச்சி மா காவேரி மருத்துவமனை சார்பில் பாலூட்டும் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தை திருச்சி மாவட்ட உதவி கலெக்டர் சேஷாத்திரி மயும் தீபி சானு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மா காவேரி மருத்துவமனையின் மூத்த நவீன குழாய் நிபுணர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் இந்த ஊர்வலம் ரோட்டரி கிளப் மெட்ரோ திருச்சி இன்னர் வீல் கிளப் மெட்ரோ திருச்சி தேசிய நவீன குழாய் மருத்துவ மன்றம் மற்றும் இந்திய குழந்தை மருத்துவக் கழகம் திருச்சி கிளை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது .
தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் தாய்மார்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மா காவேரி மருத்துவமனையில் நிறைவடைந்தது இதில் மா காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் ரோட்டரி மற்றும் இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments